
posted 18th March 2022
பால் புரக்கேறி சிசு மரணம்
தாய்ப்பால் அருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்ற 8 மாதப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பால் புரைக்கேறியமையே உயிரிழப்புக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வட்டுக்கோட்டை, அராலி வடக்கைச் சேர்ந்த யோகசீலன் கிருத்திகா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை அதிகாலை 4.30 மணியளவில் அசைவற்றுக் காணப்பட்டுள்ளது.
குழந்தை உடனடியாக யாழ். போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்தமையை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இறப்பு விசாரணைகளை யாழ். போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார்.
அத்துமீறிய இந்திய மீனவர்கள் சிறையில்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறு பேருக்கு பத்தாண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட தலா ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று விடுதலை செய்துள்ளது.
நாட்டுப் படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போதே இந்திய மீனவர்கள் ஆறு பேரும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமை, கைதின்போதும் இடையறாது தொழிலில் ஈடுபட்டிருந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த தண்டனை அறிவிக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை,
நாட்டுப்படகு என்பதால் படகை விடுவிப்பது குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி நடைபெறும் என்றும், இதன்போது படகின் உரிமையாளர் மன்றில் முன்னிலையாகவேண்டும் என்றும் நீதிபதியால் அறிவுறுத்தப்பட்டது.
சிறையிலிருந்து தப்பிய கைதி
வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பகுதியில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின்பேரில் வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கக்தக்க இளைஞரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவேளை தப்பியோடியுள்ளார்.
இவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பித்து சென்றுள்ளார். தப்பிச் சென்ற கைதியை வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிஸாருடன் இணைந்து தேடி வருகின்றனர்.
பொருளாதார மத்திய நிலையம் திறப்பதற்கு பிரதமர் யாழ் விஜயம்
பொருளாதார மத்திய நிலையம் ஒன்றைத் திறந்து வைப்பதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என தெரியவருகிறது.
தென்மராட்சி - மட்டுவில் வண்ணாத்தி பாலத்துக்கு அருகில் உள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளை சனிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ். மாவட்ட செயலக ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பிரதமர் கலந்து கொண்டு மத்திய நிலையத்தையும், வர்த்தக தொகுதிகளையும் திறந்து வைக்கவுள்ளார்.
மாவட்ட விவசாய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கு வசதியாக 30ற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையத் தொகுதிகள் மத்திய நிலையத்துடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலும் இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House